No results found

    கடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்


    இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

    எண்வகை விரதங்கள் சந்தாபண விரதம் மஹாசந்தாபண விரதம் பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம் அதிகிரிச்சா விரதம் பராக விரதம் தப்த கிரிச்சா விரதம் பதகிரிச்ச விரதம் சாந்தாராயன விரதம் விரத வகைகள் இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விநாயக விரதங்கள் விநாயக சதுர்த்தி ஆவணி சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயக சட்டி விரதம் சிவ விரதங்கள் ஆனி உத்தரம் திருவாதிரை சிவராத்திரி பிரதோஷ விரதம் கேதாரகௌரி விரதம் சக்தி விரதங்கள் நவராத்திரி வரலட்சுமி நோன்பு ஆடிப்பூரம் ஆடிச் செவ்வாய் பங்குனித் திங்கள் மாசி மகம் கந்த விரதங்கள் கந்த சஷ்டி ஆடிக்கிருத்திகை வைகாசி விசாகம் தைப்பூசம் திருக்கார்த்திகை விரதம் விஷ்ணு விரதங்கள் ஏகாதசி விரதம்

    Previous Next

    نموذج الاتصال